|
காளான் படுக்கை தயாரிக்கும் முறை
பொதுவாக சிப்பிக் காளான் வளர்ச்சி வெளியே தெரியக் கூடிய பாலித்தீன் பைகளில், வளர்க்கப்படுகிறது. இந்த பையின் அளவு 60 x 30 செ.மீ, 80 காஜ் தடிமனுடன் இருக்க வேண்டும்.
செய்முறை:
- கிருமி நாசினி கொண்டு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்
- பாலித்தீன் பைகளை எடுத்து அடி நுனியை நூல் கொண்டு மேல் நோக்கி இருக்குமாறு கட்டி விட வேண்டும்
- கிருமிநீக்கம் செய்யப்பட்ட வைக்கோலை ஈரம்போக நிழலில் உலர்த்த வேண்டும்
- நன்கு வளர்ந்த விதைப் படுக்கையை வெளியே எடுத்து, அமிழ்த்தி 2 அரைப் பகுதிகளாக பிரிக்க வேண்டும் (ஒரு வித்துப் பையிலிருந்து 2 படுக்கைகள் தயார் செய்யலாம்)
- பாலித்தீன் பையின் அடியில் 3” அளவு உயரத்திற்கு வைக்கோலை நிரப்பி, ஒரு கையளவு காளான் வித்தை எடுத்து, வைக்கோல் படுக்கையின் மீது தூவ வேண்டும்
- இரண்டாவது அடுக்கு வைக்கோலை 5” உயரத்திற்கு நிரப்பி, காளான் வித்தையும் மேற்சொன்னபடி நிரப்பவும்
- 5 அடுக்கு வைக்கோல் மற்றும் காளான் வித்துக்கள் வரும் வரை இந்த முறையை திரும்ப திரும்ப செய்ய வேண்டும்
- படுக்கையை மெதுவாக அமிழ்த்தி, பின் நூலால் இறுக்கமாகக் கட்ட வேண்டும்
- காற்றோட்டத்திற்காக 6 துளைகள் இட வேண்டும்
- கூரை வேயப்பட்ட அறையில் இந்த படுக்கைகளை அலமாரி அமைப்புகளில் (அ) தொங்கும் நிலையிலோ அடுக்கவும்
- அறை வெப்ப நிலை 22 – 250 செ மற்றும் ஒப்பு ஈரப்பதம் 85 – 90%
- ஏதும் மாசுபட்டுள்ளதா என்று கண்காணிக்க வேண்டும். அப்படி இருந்தால் அகற்றி விட வேண்டும்
- அதேபோல், பூச்சிகள் ஈக்கள், வண்டுகள், கரையான்கள், ஏதும் தாக்கியிருந்தர், மாலத்தியான் 1 மி.லி / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்
- நன்றாக பரவிய விதைப் படுக்கையை வளரும் அறைக்கு மாற்ற வேண்டும்
விதைப்படுக்கைகள் தயாரிக்கும் முறை |
|
வைக்கோலை 5 செ.மீ அளவுக்கு வெட்டுதல்
|
|
வைக்கோலை 4 – 5 மணி நேரத்திற்கு ஊற வைத்தல் |
|
படுக்கைகளை உட்செலுத்துவதற்கான படுக்கை வித்து |
|
பாலித்தீன் பை: 60 x 30 செ.மீ, 80 காஜ் தடிமன் |
|
பையின் ஒரு முனையை நூலைக் கொண்டு கட்டுதல் |
|
வைக்கோலை 3” உயரத்திற்கு பாலித்தீன் பையின் அடியில் நிரப்புதல் |
|
காளான் வித்துக்களைத் தூவுதல் |
|
இரண்டாவது அடுக்கு வைக்கோலை 5” உயரத்திற்கு நிரப்பி, காளான் வித்தையும் நிரப்பவும் |
|
ஐந்து அடுக்கு வரும் வரை திரும்ப திரும்ப செய்தல் |
|
மெதுவாக அழுத்தி, நூலைக் கொண்டு பையை ஈட்டுதல் |
|
6 காற்றோட்டத் துளைகள் ஏற்படுத்துதல் |
|
விபரங்கள் இடுதல் |
|
தொங்கும் கயிறு முறை |
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- வித்து பரவும் அறையை இருட்டாக வைத்திருக்க வேண்டும். இதனால் வித்துக்கள் வேகமாக வளரும்
- எலி கொல்லியை குறிப்பிட்ட கால இடைவெளியில் வைக்க வேண்டும்
- நீரை மணல் அடுக்கின் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் தெளிக்க வேண்டும்
- காளான் படுக்கைகளின் மீது பூச்சிக் கொல்லிகளை தெளிக்கக் கூடாது
|
|